மட்டக்களப்பில் மிக நீண்ட நாட்களின் பின்னர் பலத்த மழை தென்கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை தளம்பல் நிலை காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு.
ஞாயிற்றுக்கிழமை(02.08.2026) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்டத்தி மிக நீட்ட நாட்களின் பின்னர் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்திருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் திங்கட்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை வீழ்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்; ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தலுக்க அமைவாக கடல் சார் தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாத காரணத்தினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட கரையோர பகுதிகளிலும் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதுடன் கடற்கரையில் கடலின் நிலைமையைப் பற்றி அவதானித்த வண்ணம் உள்ளனர்.
எனினும் திங்கட்கிழமை காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வானிலை மப்பும் மந்தாரமுமாகவுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது





