• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பில் உடைந்த புதுப்பாலம்: இரவோடு இரவாக அமைச்சரை நேரில் அழைத்துச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் க.பிரபு அதிரடி நடவடிக்கை!

மட்டக்களப்பில் உடைந்த புதுப்பாலம்: இரவோடு இரவாக அமைச்சரை நேரில் அழைத்துச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் க.பிரபு அதிரடி நடவடிக்கை!

மட்டக்களப்பு நகருக்குள் இணையும் பிரதான போக்குவரத்துப் பாலங்களுள் ஒன்றான புதுப்பாலம் திடீரென உடைந்து, போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாகத் தடைப்பட்டுள்ள நிலையில், உடைந்த பாலத்தின் பகுதிக்கு மக்கள் பிரதிநிதிகள் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரை நேற்று இரவு அப்பகுதிக்கு நேரடியாக அழைத்துச் சென்று உடைந்த பாலத்தின் நிலவரங்களை ஆராய்ந்தார்.

குறித்த பாலம் அமைந்துள்ள வீதியின் முக்கியத்துவம் மற்றும் மக்களின் அவசரத் தேவை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்றார். அத்துடன், அங்கு தற்காலிக பெய்லி (Bailey) பாலம் ஒன்றினைத் துரிதகதியில் அமைப்பதற்கான முயற்சிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாகவே, அரசின் முக்கிய அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களை இரவோடு இரவாக அங்கு அழைத்துச் சென்று, பாலத்தின் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தியதுடன், அடுத்தகட்டப் பணிகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.

மாவட்ட மக்களின் நலனில் அக்கறையுள்ள ஒரு மக்கள் பிரதிநிதியாக, விபத்து நடந்த சில மணிநேரங்களிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேற்கொண்ட இந்தத் துரித மற்றும் கரிசனை மிக்க முயற்சிக்கு, அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Share the Post: