• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • புத்தளம் பாதையில் ரயில் தடம் புரண்டது: கொழும்பு கோட்டை – சிலாபம் ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தல்!

புத்தளம் பாதையில் ரயில் தடம் புரண்டது: கொழும்பு கோட்டை – சிலாபம் ரயில் சேவைகள் மாதம்பே வரை மட்டுப்படுத்தல்!

கொழும்பு – புத்தளம் ரயில் பாதையில், சிலாபம் ரயில் நிலையத்திற்கு அருகில் திங்கட்கிழமை (01) மதியம் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக, அந்த வழித்தடத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக மாதம்பே ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் புறப்பட்ட ரயிலே, பிற்பகல் 12.30 மணியளவில் சிலாபம் ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட போது இவ்வாறு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த ரயில் தடம் புரர்வுச் சம்பவம் காரணமாக புத்தளம் வீதியினூடான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டையிலிருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களும் தற்காலிகமாக மாதம்பே ரயில் நிலையம் வரை மட்டுமே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தி, பாதையை வழமைக்குக் கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Share the Post:

Related Posts