• Home
  • ›
  • கல்வி
  • ›
  • பதில் பாட வேளைகளுக்கு என்னை அனுப்பினால் பெரும்பாலும் நான் கற்பிப்பதில்லை இனியும் கற்பிக்க போவதில்லை..!!

பதில் பாட வேளைகளுக்கு என்னை அனுப்பினால் பெரும்பாலும் நான் கற்பிப்பதில்லை இனியும் கற்பிக்க போவதில்லை..!!

பதில் பாட வேளைகளை மாணவர்களின் தனித் திறமைகளை வளர்க்கும் களமாகவே நான் பயன்படுத்துபவன்.

இப்படி இருக்கையில் கடந்த வாரம் நான் ஒரே தரத்தைச் சேர்ந்த இரு வகுப்புகளுக்கு பதில் ஆசிரியராக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்று பெஸ்ட் டிவிஷன் மற்றது லோ டிவிசன் (lower division.)பிள்ளைகளைகளின் ஆளுமை விருத்திக்காக அன்றைய பாட வேளையில் விவாதம் ஒன்றை மேற்கொள்வதாக திட்டம்.தலைப்பு : நாம் தலை நிமிர அவசியமானது படிப்பும் பட்டமும் / பணம் (இத் தலைப்பு Aathavan Gnana வின் முகப்புத்தகப்பதிவில் பார்த்தது)முதலில் விவாதத்தை நடத்தியது Lower division வகுப்பறையில்…சரமாரியான வாதங்கள்… விவாத விதிகள் சில சந்தர்ப்பங்களில் மீறப்பட்டாலும் அனல் பறந்த கருத்து மோதல் இரு தரப்பிலும் நியாயங்களும் சான்றுகளும் அனல் பறக்க முன்வைக்கப்பட்டன;இதன் தாக்கம் அடுத்தடுத்த பாட வேளைகளுக்கு போன ஆசிரியர்களின் வகுப்புகளிலும் தொடர…..

“ஐயோ ஆதி ஒரு விவாதத்தை தொடக்கி விட்டீங்கள் அவங்களுக்கு என்ற பாட நேரம் போய் படிப்பிக்கவே முடியல… என்ற சக ஆசிரியர்கள் சிலரின் சின்ன முறைப்பாட்டோடு அன்றைய நாள் நிறைவுக்கு வருகின்றது.

அடுத்த நாள் அதே தரத்தில் கெட்டிக்கார வகுப்புக்கு (Best division) செல்வதற்கான வாய்ப்பு….அதே திட்டம்..அதே தலைப்பு..எனக்குள்ளே மிக பெரும் எதிர்பார்ப்பு..இவங்கள் கெட்டிக்கார பிள்ளைகள்இன்றைக்கு விவாதம் பிச்சு உதறுவாங்கள் என்று…ஆனால் நடந்ததோ பெரும் ஏமாற்றம்…30-35 மாணவர்கள் இருந்திருப்பார்கள். ஒன்று இரண்டு மாணவர்களை தவிர வேறு எவருமே வார்த்தைகள் அற்றவர்களாக…சுயமாக சிந்தித்து கருத்துக்களை முன் வைக்கும் திறனற்றவர்களாக…சான்றுகளை முன்வைத்து தம் கருத்துக்களை வலுப்பெற செய்ய முடியாதவர்களாக.. முன்வந்து கதைக்க பயந்தவர்களாக…நானுமோ என்னாலான முயற்சிகள் எல்லாவற்றையும் மேற்கொண்டேன் அவர்களை பேசத் தூண்டுவதற்கு…. ஆனாலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஆனாலும் எனக்குள் மிகப்பெரும் குழப்பம்…இதில் எது கெட்டிக்கார வகுப்பு…இவர்களில் யார் கெட்டிக்காரர்கள்..

____________________________________

1. மதிப்பெண்களுக்கு (marks) மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் கல்வி முறை

“அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே அவன் சிறந்த மாணவன்” என்றொரு எழுதப்படாத விதி உருவாக்கப்பட்டுள்ளது. புத்தகப் படிப்பைத் தாண்டி, வெளி உலகை எதிர்கொள்ளும் “வாழ்க்கைத் திறன்கள்” (Life Skills) கற்றுக்கொடுக்கப்படாததால், இத்தகைய திறமையான பிள்ளைகள் நிஜ உலகப் போட்டிகளில் பின்தங்கிவிடுகிறார்கள்.

2. பாடசாலைகளுக்கு இடையிலான போலிப் போட்டித்தன்மையும், மேடை வாய்ப்புகள் மறுக்கப்படலும்

சாதாரண தரத்தில் 9 A எடுப்பது என்பது ஒரு மாணவனின் எழுத்துப்பூர்வமான ஞாபக சக்தியையும் அறிவையும் காட்டுகிறதே தவிர, அவனது ஒட்டுமொத்த ஆளுமைக்கான சான்றல்ல.

குறிப்பிட்ட சில மாணவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

ஏனைய திறமையான, அமைதியான மாணவர்களின் “தனித்திறன்” மற்றும் “ஆளுமை” கண்டுகொள்ளப்படுவதில்லை.

3. தனிமைப்படுத்தப்பட்ட கற்றல் சூழலும், மென்திறன்களின் (Soft Skills) பற்றாக்குறையும்

பிள்ளைகள் அதிகாலை முதல் இரவு வரை மேலதிக வகுப்புகளுக்கு (Tuition) அனுப்பப்பட்டு, சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

அவர்கள் மற்றவர்களுடன் கலந்துரையாட, குழுவாக இணைந்து பணியாற்ற (Teamwork), சவால்களைத் தைரியமாக எதிர்கொள்ள பழகிக்கொள்வதில்லை.பாடசாலை அதிபர்களே அதிக கொள்திறன் கொண்ட மெமரிக்கட்டைகளாக வளர்க்கப்படும் பிள்ளைகளால் பெறப்படும் வெறும் 9A களின் எண்ணிக்கையை வைத்து பெருமைப்படாமல்..ஐயோ எங்களால் ஒரு 9A கூட பெற முடியவில்லையே என்று கவலைப்படாமல்..ஆளுமையானமனிதாபிமான மிக்கசமூக நலச் சிந்தனையுடையசந்ததிகளை உருவாக்க முயற்சியுங்கள்.இவைகள் இல்லாத 9Aகளை விட இவற்றோடு எடுக்கும் 3/4A கள் மேலானவை..!!

எஸ்.ஜெ.ஆதி

Share the Post:

Related Posts