• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நாட்டின் பல பகுதிகளில் வானிலையில் மாற்றம்: மேல், சப்ரகமுவையில் பலத்த மழை – 6 மாவட்டங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வானிலையில் மாற்றம்: மேல், சப்ரகமுவையில் பலத்த மழை – 6 மாவட்டங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை!

இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளின் வானிலையில் மாற்றங்கள் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை: சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகக் கூடும்.
  • பலத்த காற்று: வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று இடைக்கிடையே வீசக்கூடும்.

வெப்ப எச்சரிக்கை: கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் பகல் நேரத்தில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு உயர்வடைந்து காணப்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை, சூறாவளிக் காற்று மற்றும் அதிக வெப்பத்தினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Share the Post:

Related Posts