• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • நவம்பர் 09 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்-

நவம்பர் 09 இல் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டம்-

பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கமானது (EPDOTU), ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து எதிர்வரும் 2026 நவம்பர் 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஒரு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

 மட்டக்களப்பு ,திருகோணமலை ,அம்பாறை,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களது பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாளப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அத்தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

நியாயமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல்   தொழில் உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துதல்   சேவை நலன்கள் மற்றும் நலன்புரி வசதிகளை உறுதிசெய்தல்   இடமாற்றம் மற்றும் சேவை தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணுதல்   அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குத் தேவையான உரிமைகளையும் நீதியையும் பெற்றுக்கொடுத்தல்   முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

  “எமது உரிமைக்காக ஒன்றிணைவோம்! ஒற்றுமையே எமது பலம்!” எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இதில் இணைந்து தங்களது ஆதரவை வழங்குமாறும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

Share the Post: