50வது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அம்பாறை மாவட்ட மட்டக் கூடைப்பந்து (Basketball) போட்டிகள் நேற்று சனிக்கிழமை (13.06.2026) கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலை விளையாட்டு வளாகத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இப்போட்டிகளில் கல்முனை வடக்கு பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் தங்களது சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டங்களை வென்று மாகாண மட்டப் போட்டிகளுக்கு கம்பீரமாகத் தகுதி பெற்றுள்ளன.
மாவட்ட மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி, அடுத்த கட்டமாக மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள கல்முனை வடக்கு பிரதேசத்தின் அனைத்து வீர, வீராங்கனைகளுக்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்தவர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன

Views: 161




