• Home
  • உள்ளூர் செய்திகள்
  • தெஹிவளை வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல்: சிறுவர்கள் இருவர் பரிதாபமாக பலி; தந்தைக்குப் தீவிர சிகிச்சை!

தெஹிவளை வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல்: சிறுவர்கள் இருவர் பரிதாபமாக பலி; தந்தைக்குப் தீவிர சிகிச்சை!

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்த அமைந்துள்ள சிரிசங்கபோ மாவத்தை பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (2026 செப்டம்பர் 11) அதிகாலை 3.15 மணியளவில் அடையாளம் தெரியாத நபரொருவரால் இந்த கைக்குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த தந்தையும் அவரது பிள்ளைகளும் உடனடியாகக் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றியும் சிறுவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் 10 மற்றும் 14 வயதுடைய சகோதரர்களாவர். காயமடைந்த 52 வயதுடைய நபர் உயிரிழந்த சிறுவர்களின் தந்தையாவார்.

3 பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணை

இத்தாக்​குதலுக்கான பின்னணி காரணம் அல்லது சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், சந்தேகநபர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்காக 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: