திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (16) திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 இக்கூட்டத்தில், திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு  மற்றும் வெளி வகவகார பிரதி அமைச்சருமான  அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான  ஜயந்தலால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,மாகாண பிரதம செயலாளர் கே.குணநாதன் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்  டபிள்யூ ஜி எம் ஹேமந்த குமார, உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் உட்பட அரச உயரதிகாரிகள், முப்படைகளின் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள், திட்டமிடப்பட்ட திட்டங்கள் மற்றும் அவை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களில் தலையிட வேண்டிய பொதுத்துறைத் தரப்பினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

…………………

Share the Post: