திருகோணமலையில் தமிழ் சிங்கள அகராதி நூல் வெளியீட்டு விழா.!

(ஹஸ்பர் ஏ எச் 

தம்பிராஜா இராஜசிங்கம் அவர்களின் தமிழ் சிங்கள அகராதி தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (03.10.2026) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை கலாசார மண்டபத்தில் தி/ சுமேதங்கர வித்தியாலய அதிபர் பி.ரி.எஸ். குமார தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் முதன்மை அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுனர் பேராசிரியர் ஜெயந்தலால் ரட்ணசேகர,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண்ஹேமச்சந்திர ஆகியோரும்,  விசேட விருந்தினர்களாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே. எஸ். குகதாசன்,  ரொசான் அக்மீமன ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பு அதிதிகளாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார,  திருகோணமலைப் பிரிவின் பிரதி பொலிஸ் அதிபர் டி.எம்.யூ. எம். திஸநாயக்கா , கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி.  எஸ்.  ஆர். ஹசந்தி , கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் என்.  சரவணபவன்,  கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி.  மேனகா புவிக்குமார்,  தென் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஏ. எப். எம். அஸ்ரப்,  திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் கே. ரி. சுந்தரேசன்,  றுகுணு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜெயசிங்க ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Share the Post: