• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ‘திட்வா புயலால் சேதமடைந்த உமா ஆறு மகா பாசனத் திட்டத்தின் நிரந்தர புனரமைப்பு பணிகள் தொடக்கம்

‘திட்வா புயலால் சேதமடைந்த உமா ஆறு மகா பாசனத் திட்டத்தின் நிரந்தர புனரமைப்பு பணிகள் தொடக்கம்

திட்வா புயல் தாக்கத்தினால் கடுமையாக சேதமடைந்த பதுளை மாவட்டத்தின் ஊவா பரணகம பிரதேசத்தில் அமைந்துள்ள உமா ஆறு மகா பாசனத் திட்டத்தின் நிரந்தர புனரமைப்பு பணிகள் இன்று (27) தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு உமா ஆற்றின் பேரவெல்ல அணைக்கட்டுப் பகுதியில் நடைபெற்றது.

திட்வா புயல் காரணமாக பல இடங்களில் உடைந்து சேதமடைந்திருந்த இத்திட்டம், பாசனத் திணைக்களத்தின் மேற்பார்வையில், விவசாயிகள் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மிகக் குறுகிய காலத்திற்குள் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டது.

அத்தகைய தற்காலிக புனரமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2025 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் மீண்டும் நீர்விநியோகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், விவசாயிகளின் எதிர்கால விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய பெரும் கூட்டு உழைப்பின் மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பாசனத் திணைக்களம் ரூபாய் 228.6 மில்லியன் செலவில் உமா ஆறு மகா பாசனத் திட்டத்தை நிரந்தரமாக புனரமைக்கும் பணிகளை இன்று ஆரம்பித்துள்ளது.

இதன் மூலம், அந்தப் பிரதேசத்தின் விவசாய செயல்பாடுகளுக்கு நீண்டகால நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகா சங்கத்தின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் சமந்த வித்யாரத்ன அவர்களுடன் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதத் பலகல்ல மற்றும் ரவீந்திர பண்டார ஆகியோரும், ஊவா பரணகம பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட உள்ளூர் அரசியல் பிரதிநிதிகளும், பதுளை மாவட்ட பாசனத் திணைக்கள இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளும், அந்தப் பகுதி விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

Share the Post: