டெங்கு நோயிலிருந்து திருகோணமலையை பாதுகாக்க ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கை!

திருகோணமலை மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அனைத்து அரச துறைகளையும் உள்ளடக்கிய விசேட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை ஒன்று உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட டெங்கு பணிக்குழு கூட்டம் இன்று (ஜூன் 30), திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பிரதி அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அருண் ஹேமச்சந்திரா இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். டெங்கு வைரஸ் வகைகள் மாறிவரும் நிலை.மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான மாற்றங்கள். திருகோணமலை மாவட்டத்தில் (டெங்கு பரப்பும் கொசுக்கள்)

பெருக்கம் கணிசமாக அதிகரித்துள்ளமை.டெங்கு கட்டுப்பாடு என்பது சுகாதாரத் துறையின் பொறுப்பு மட்டும் அல்ல!”

கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள், இந்த சவாலை எதிர்கொள்ள அனைத்து நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொதுமக்களின் தீவிர பங்களிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.தொடர்ச்சியான தூய்மைப் பணிகள்: கொசுக்கள் பெருகும் இடங்களை கண்டறிந்து அழித்தல்.முறையான கழிவு முகாமைத்துவம்: உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல்.

பொதுமக்கள் விழிப்புணர்வு:

டெங்கு ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வை தீவிரப்படுத்துதல்.சுகாதாரத் துறை, பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் பொது நிர்வாக அதிகாரிகள் இணைந்து களத்தில் இறங்குதல்.ஒற்றுமை, பொறுப்பு மற்றும் முன்கூட்டிய செயல்பாட்டின் மூலம் திருகோணமலை மாவட்டத்தை டெங்கு அபாயத்திலிருந்து மீட்டெடுப்போம்

Share the Post: