• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • டயகம இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

டயகம இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)

இவ்விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் ஹட்டன் – போடைஸ் வழியாக டிக்கோயா பட்டல்கல பகுதியில் இடம்பெற்றது.

மற்றொரு பேருந்திற்கு இடம் கொடுக்க முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து நேரத்தில் பேருந்தில் சுமார் 35 பேர் பயணித்திருந்ததாகவும், ஓட்டுநரும் உதவியாளரும் காயமடைந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் கூறியது போன்று மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும்  2 ஆம் திகதி சத்வீக போராட்டத்திற்கும் அழைப்பு  – ஸ்ரீநேசன் எம்பி கோரிக்கை.