இன்று (29/04/2026) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மேனாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா. சிறிநேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டது. மேலும் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கான எதிர்கால திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், மாவட்டத்தில் விவசாய மற்றும் மீன்வளத் துறைகளை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்தல், மயிலத்தன்மடு – மாதவனை மேச்சல் தரைக் காணி, சிறு குளங்கள் புனரமைப்பு மற்றும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.




