• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • ஞானசார தேரரின் சிறைத்தண்டனை உறுதி: மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரரின் சிறைத்தண்டனை உறுதி: மேல்முறையீட்டு மனுவை நிராகரித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!

பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 09 மாத கால சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (23) உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையிலும், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை குற்றவாளியாகக் கண்டு 9 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

Share the Post:

Related Posts