கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், கிழக்கு மாகாணத்தின் மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு இடையேயான கூட்டம் நேற்று (21) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம், இந்திய உதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம், மாகாண வருமான இலக்குகளை அடைதல், கிழக்கு மாகாண சபைக்குள் உள்ள அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள திட்டங்களை மீளாய்வு செய்தல் மற்றும் அவற்றில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நிறுவனத் தலைவர்களின் தலையீடு போன்ற விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இதில் கிழக்கு மாகாணத்தின் மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன் மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத்தின் தலைவர்கள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.







