• Home
  • உள்ளூர் செய்திகள்
  • கிண்ணியா அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ரூ. 29 மில்லியன் செலவில் புதிய மாடிக் கட்டடம்: அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அடிக்கல் நாட்டினார்!

கிண்ணியா அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ரூ. 29 மில்லியன் செலவில் புதிய மாடிக் கட்டடம்: அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அடிக்கல் நாட்டினார்!

கிண்ணியா அல்-அஸ்ஹர் வித்தியாலய மாணவர்களின் நீண்டகால வகுப்பறைத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 29 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் புதிய இரண்டு மாடிக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (11) மிகச் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம். அனீஸ் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்டத்தின் (PSDG) கீழ் சுமார் 29 மில்லியன் ரூபா இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் வசதிக்காக 25 x 90 அடி பரப்பளவில் இந்த நவீன வகுப்பறைக் கட்டடம் அமையவுள்ளது.

இந்நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், கிண்ணியா நகரசபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அடிக்கல் நாட்டு விழாவைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறி விழாவிற்கு மேலும் சிறப்பூட்டின. இப்புதிய கட்டடத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் சூழல் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post: