• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கல்முனையில் பரபரப்பு: கடத்த முற்பட்ட வேன் கடைகளுக்குள் புகுந்து விபத்து – சந்தேகநபர் தலைமறைவு!

கல்முனையில் பரபரப்பு: கடத்த முற்பட்ட வேன் கடைகளுக்குள் புகுந்து விபத்து – சந்தேகநபர் தலைமறைவு!

கல்முனை சந்தைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றை கடத்த முயன்ற நபரொருவர், கட்டுப்பாட்டை இழந்து கடைகளுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய பின் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் கல்முனை நகரின் பொலிஸ் வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கல்முனை சந்தை தொகுதிக்கு அருகில் அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் வேன் ஒன்றை நபரொருவர் கடத்திச் செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது அதிவேகமாக இயக்கப்பட்ட வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த இரண்டு கடைகளுக்குள் புகுந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கடைகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்தையடுத்து, கடத்தல்காரர் வேனை சம்பவ இடத்திலேயே கைவிட்டுவிட்டு தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: