• Home
  • உள்ளூர் செய்திகள்
  • உலக சுற்றாடல் தினம்: சம்மாந்துறையில் ‘மின்மினி’ அமைப்பின் ஏற்பாட்டில் பயன்தரும் மர நடுகை நிகழ்வு கோலாகலமாக ஏற்பாடு!

உலக சுற்றாடல் தினம்: சம்மாந்துறையில் ‘மின்மினி’ அமைப்பின் ஏற்பாட்டில் பயன்தரும் மர நடுகை நிகழ்வு கோலாகலமாக ஏற்பாடு!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையுடன் மின்மினி கல்வி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக சேவை அமைப்பு இணைந்து நடத்திய பயன்தரும் மர நடுகை விசேட நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (05) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில், செந்நெல் கிராம வாசிப்பு நிலைய வளாகத்தில் இந்நிகழ்வு அரங்கேறியது. சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பசுமையின் அவசியத்தை வலியுறுத்தி, எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி இந்த மர நடுகை செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா, மின்மினி கல்வி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகர் மின்மினி மின்ஹா, சிரேஷ்ட ஊடகவியலாளர் தேசபந்து ஜலீல் ஜீ மற்றும் செந்நெல் கிராம வாசிப்பு நிலைய பொறுப்பாளர் நௌசாத் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி நிகழ்வை சிறப்பித்தனர்.

Share the Post: