இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 11.07.2026 திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்.
இதன் போது மறைந்த பெருந்தலைவர் அமரர் இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ச.குகதாசன், ஞா.ஸ்ரீநேசன், க.கோடீஸ்வரன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் மாவட்ட, பிரதேசக் கிளை உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.







