நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின் கீழ் சிறப்புத் தணிக்கைக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.2023 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நுவரெலியா மாவட்டத்தின் 10 பிரதேச செயலகங்களில் இந்தத் தணிக்கை நடத்தப்படவுள்ளது.நோர்வுட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ‘அஸ்வெசும’ பயனாளிகளின் நிதி மோசடிகள் குறித்து விரிவாக ஆராயப்படும்.
- ‘டித்வா’ சூறாவளி பாதிப்புக்கான நிவாரணக் கொடுப்பனவுகள்.
- கொரோனா காலத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சமூர்த்தி ஊடாக வழங்கப்பட்ட ரூ. 5,000 கொடுப்பனவு.
- சமூர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் உரிய பயனாளிகளைச் சென்றடைந்துள்ளனவா என்பது பற்றிய ஆய்வு.
தணிக்கைப் பணிகள் ஆரம்பமாவதற்கு முன்னர், இது தொடர்பான தகவல்கள் அல்லது புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாகத் தன்னிடம் வழங்கி உதவுமாறு பயனாளிகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆரச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.




