• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடு

அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடு

பாறுக் ஷிஹான்

தீபாவளித் திருநாளை முன்னிட்டு அம்பாறை மாவட்டப் பொலிஸாரின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வு   திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் வெகுசிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சமூகப் பொலிஸ் பிரிவினரின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்  ஏ.எஸ்.பி.சி சுஜித் வேதமுல்ல      பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

 இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பி.வி.  கஸ்தூரியாராச்சி, அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  நுவான் தந்தநாராயண, திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர்   சுந்தரலிங்கம் சசிகுமார், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாகத்தினர், பொது அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஆலயத்திற்கு வருகைதந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு, சிவில் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளால் மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் கௌரவிப்புச் செய்யப்பட்டது. அத்துடன், மாணவர்களின் பாரம்பரிய கோலாட்டக் கலைநிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ நீ. அங்குசநாத குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வுகள் நடைபெற்றதுடன், அம்பாறை மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் சமகால நல்லிணக்கச் சூழலை வலுப்படுத்தும் நோக்கில் உரையாற்றினர்.

Share the Post: