அதிரடியாகக் குறைந்த தங்க விலை! இன்றைய சந்தை நிலவரம் வெளியானது!

இலங்கையில் வீழ்ச்சியடைந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் இதோ!

இலங்கையில் கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் (08) தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாய் குறைவடைந்துள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சந்தை நிலவரங்களின்படி தற்போதைய தங்க விலை விபரங்கள் வருமாறு,

பவுண் கணக்கில்:

  • 24 கரட் தங்கம் (1 பவுண்): ரூ. 383,000
  • 22 கரட் தங்கம் (1 பவுண்): ரூ. 352,400

கிராம் கணக்கில்:

  • 24 கரட் தங்கம் (1 கிராம்): ரூ. 47,875
  • 22 கரட் தங்கம் (1 கிராம்): ரூ. 44,050

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: