• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தால் சிறுபான்மைச் சமூகம் பாதிக்கப்படப்போகின்றார்கள் – சிறிநாத் எம்.பி

கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தால் சிறுபான்மைச் சமூகம் பாதிக்கப்படப்போகின்றார்கள் – சிறிநாத் எம்.பி

vadivel shagthivel

அரசால் முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் மூலம், சிறுபான்மைச் சமூகம் அல்லது மாற்றுக் கருத்து உள்ளவர்கள் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பது பற்றி, முக்கியமாக பயங்கரவாதம் என்பதற்காக ஒரு வரையறை இன்றி, அதன் மூலம் ஒரு தெளிவற்ற வரவிலக்கணத்தைப் கொடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான போராட்டங்கள், கருத்து சுதந்திரம், சுயநிர்ணய உரிமை மற்றும் கோரிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகளைப் பயங்கரவாதம் அல்லது தூண்டுதல் எனக் குற்றச்சாட்டு வாய்ப்பளித்து, தன்னிச்சையான கைது மற்றும் அடைத்து வைப்பு, நீதித்துறை மேற்பார்வையின்றி நீண்ட காலம் வைப்பதற்கான அதிகாரத்தை, நிறைவேற்று அதிகாரத்தை வழங்குவதனால், சிறுபான்மையின செயற்பாட்டாளர்கள் அல்லது மாற்றுக் கருத்து உள்ள செயற்பாட்டாளர்கள், எவ்வாறு சிவில் சமூக உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பது மிகத் தெழிவாகப் புரிகின்றது.

என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்தள்ளார்.

அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டங்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுக்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தெழிவுபடுத்தும் விழிப்புணர்வு நிழ்வு சனிக்கிழமை(07.11.2026) மட்டக்களப்பில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இவ்விடையம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….

சிறுபான்மையினம் பல்வேறு வகையான நினைவு நாட்களைக் அனுஸ்ட்டிக்கின்றது. மாவீரர் நினைவு நாள், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரும் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள், தங்களுடைய நில ஆக்கிரமைப்பு, கலாசாரம், மொழி, தொல்லியல் திணைக்களம் ஊடாக ஏற்பாடு செய்யப்படுகின்ற விடயங்களுக்கு எதிராகப் போராடுகின்ற பொழுதும் அதை எவ்வாறு இலகுவாகத் தடை செய்வது.

மற்றும் ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி கடுமையாக அச்சுறுத்தி இவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்களை கொண்டு செல்வது என்பதை மிகத் தெளிவாக இந்த அரசு ஒரு வினைத்திறனான முறையில் கொண்டு செல்ல முனைகின்றது. போராட்டங்களின் மூலம் மிக நெருக்கடியான சூழ்நிலைகளை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் எவ்வாறு செய்யத் துணிவார்களென்று உண்மையிலே அதிகாரத்திற்காக போராட்டத்தை நடத்தியவர்கள் அவற்றினைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பல்வேறு காரணங்களை முன்வைக்கின்றார்கள்.

நாட்டிலே இருக்கின்ற சட்டவிரோதமான நடவடிக்கைகள், ஊழல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்காக இந்தச் சட்டங்கள் முக்கியமானதாகக் கூறப்படுகின்ற அதேவேளை, இவ்வாறான சட்டங்களின் ஊடாகச் சமகாலத்தில் பல விடயங்கள், நெருக்கடியான விடயங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகவும், மாற்றுக் கருத்துக்களைக் கொண்டு செல்வதற்கு எதிராகவும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது மிகத் தெளிவாக நாம் புரிந்து கொண்டோம்.

எதிர்காலம் பற்றிய சந்தேகம், எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற தன்மை இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசு முன்னெடுக்கின்ற போது அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதையும், அதற்கு எதிராக மக்களை ஒன்றுகூட்டி ஆர்ப்பாட்டம் செய்பவர்களையும் தடை செய்வதற்கான வாய்ப்புகளும் எதிர்காலத்தில் மிகப்பெரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்பது தெளிவாக தெரிகிறது.

இவற்றை வருவதற்கு முன்னரே சமூக போராட்டங்களின் ஊடாகவும், பாராளுமன்றத்தில் மிகப்பெரிய அளவில் நாங்கள் எதிர்ப்பினை ஆற்றுவதன் மூலமாகவும், சட்டத்துறையின் ஊடாகவும் நாங்கள் எங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவிக்க வேண்டும்.

சமூகமட்ட அமைப்புகள் மூலமாக மட்டுமல்லாது, தொழிற்சங்கங்கள் மூலமாகவும் இதற்கான நாங்கள் எதிர்ப்பினை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.

எமக்கான இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகின்ற பொழுதும் ஒரு சுருக்கு கயிறாக மாற்றக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதனால் இவற்றை நாம் ஆரம்பத்திலே நிராகரித்து அவற்றுக்கு எதிரான ஒரு பிரேரணையை கொண்டு வருவதன் மூலம் மக்களுக்கு இந்த விடயங்களை தெளிவுபடுத்தி அவர்களின் எழுச்சியுள்ள விடயமாக மாற்றி அமைத்து, ராஜதந்திர ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், புவிசார் அரசியல் நிலைமைகளிலும் இவற்றை முறியடிக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

Share the Post: