உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,
பிரஜா சக்தியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஹப்புத்தளை நகரில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
நிகழ்வின் ஆரம்பமாக, ஹப்புத்தளை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகள் மற்றும் மதவழிபாடுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் ஹப்புத்தளை தமிழ் மத்திய கல்லூரி,
ஹப்புத்தளை முஸ்லிம் மகா வித்தியாலயம், ஹப்புத்தளை பிரதேச செயலகம், நகர சபை, தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர்கள்,
அரணரி பாடசாலை மாணவர்கள், நகர சபை ஊழியர்கள், பிரஜா சக்தி உறுப்பினர்கள்,
லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வழிபாடுகளில் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பலகைகளை ஏந்தியவாறு ஹப்புத்தளை நகரில் விழிப்புணர்வு ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த ஊர்வலம் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.
அதன்பின் ஹப்புத்தளை நகரத்திலிருந்து பண்டாரவளை வீதி மற்றும் முஸ்லிம் பாடசாலை வீதி பகுதிகளில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன்,
வீதியோரங்களில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன. இதில் மாணவர்கள், அரச அதிகாரிகள்,
சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
மேலும், சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் இந்த நிகழ்வு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன்,
சமூக ஒற்றுமை மற்றும் பொது பொறுப்புணர்வை வலுப்படுத்திய ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது








