• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • இலங்கையின் 4 முக்கிய நகரங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் ‘சிட்டி பிராண்டிங்’ திட்டம்: ஆரம்பக்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

இலங்கையின் 4 முக்கிய நகரங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் ‘சிட்டி பிராண்டிங்’ திட்டம்: ஆரம்பக்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!

நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘சிட்டி பிராண்டிங்’ (City Branding) திட்டத்தின் முதற்கட்டத்திற்காக அநுராதபுரம், கண்டி, கதிர்காமம் மற்றும் கொழும்பு ஆகிய நான்கு பிரதான நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நகரங்களின் வரலாற்று, கலாசார மற்றும் தனித்துவமான அடையாளங்களை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்தி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதன் ஊடாக அந்தந்த நகரங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக முறையான டெண்டர் நடைமுறைகளின் கீழ் நான்கு முன்னணி ஆலோசனை சேவை நிறுவனங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அந்நிறுவனங்கள் உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தயாரித்த முதற்கட்ட வரைபு அறிக்கை நேற்று (ஜூலை 01) அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேன மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த நகர மேம்பாட்டு பிராண்டிங் திட்ட வரைபு சமர்ப்பிக்கப்பட்டு, விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts