நாட்டில் தற்போது நிலவி வரும் மழையுடனான வானிலை காரணமாக 04 முக்கிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை (மஞ்சள்) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, பின்வரும் மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரதேச செயலக பிரிவுகள் ஆபத்தான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன:
- நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ பிரதேச செயலக பிரிவு
- கண்டி மாவட்டம்: தொலுவ பிரதேச செயலக பிரிவு
- இரத்தினபுரி மாவட்டம்: பெல்மடுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடக்கவெல, கலவாக மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகள்
- களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவு
முக்கிய குறிப்பு: மேலதிக விபரங்கள் மற்றும் அவசர உதவிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அல்லது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர அழைப்பு இலக்கமான 117 இனைத் தொடர்பு கொள்ளவும்.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பின்வரும் அறிகுறிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
- நிலத்தில் திடீரென ஏற்படும் வெடிப்புகள் அல்லது ஆழமான விரிசல்கள்.
- மரங்கள், மின் கம்பங்கள் அல்லது வேிலிகள் திடீரென சாய்வடைதல்.
- சுவர்களில் திடீர் விரிசல்கள் ஏற்படுதல் அல்லது அவை விரிவடைதல்.
- திடீரென நீரூற்றுகள் தோன்றுதல் அல்லது இருக்கும் நீரூற்றுகள் சேற்று நீராக மாறுதல்.
இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரித்துள்ளது.




