ஆரம்பப் பருவ சிறுவர் அபிவிருத்தி கல்வித் திட்டத்தின் ஆரம்ப விழாவில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆரம்பப் பருவ சிறுவர் கல்வியானது நாட்டின் ஏனைய கல்விச் செயற்பாடுகளுடன் இணையாகச் செல்ல வேண்டும் எனவும், அதற்கு கல்வி அமைச்சகம் பங்களிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டில் முன்பள்ளி பாடத்திட்டம் முறையாக வகையில் காணப்படுவதுடன், அது இன்னும் ஒரு அரச சேவையாக மாற்றமடையவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்பள்ளி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முறையான நடைமுறையோ அல்லது அவர்களைக் கண்காணிப்பதற்கான அமைப்போ இல்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டு முதல் அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் பொதுவான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், சுமார் 19,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது




