vadivel shagthivel
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் கோழிகள் ஏற்றிசெல்லும் வாகனங்கள் போற்றவற்றில் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன் விசேட பரிசோதனை நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை(08.11.2026) மேற்கொள்ளப்பட்டிருந்தன.
களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் த.கஜனனினால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது தீபாவளி பண்டிகை காலத்தில் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி இறந்த நிலையிலிருந்த கோழிகள் கைப்பற்றப்பட்டதோடு வியாபாரிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட இறந்த கோழிகள் பொதுசுகாதாரப் பரிசோதகரால் அழிக்கப்பட்டன.


Views: 34




