• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை (வியாழக்கிழமை) அவசரப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று காலை (வியாழக்கிழமை) அவசரப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட இருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேலும் தாமதிக்காமல், உடனடியாக துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

“பாலியல் வன்முறைக்கு எதிரான மக்கள் இயக்கம்” என்ற அமைப்பின் அழைப்பின் பேரில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் உள்ளிட்ட இருவர், மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக பல்கலைக்கழக மட்டத்தில் உள்வாரி விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த விசாரணை நடைமுறைகளை இழுத்தடிக்காமல், நேர்மையான முறையில் மிக விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த அவசரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Share the Post: