• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • திருகோணமலையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!

திருகோணமலையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: அரசியல் பிரமுகர்கள், இளைஞர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட நடைபவணி (ஊர்வலம்) ஒன்று நேற்று சனிக்கிழமை (23) திருகோணமலையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றம் இந்த ஆரோக்கியமான விழிப்புணர்வுப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.

போதைப்பொருளின் தீமைகள் மற்றும் அதிலிருந்து இளைய சமுதாயத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். திருகோணமலை ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த விழிப்புணர்வு நடைபவணி, நகரின் முக்கிய வீதிகளின் ஊடாக திருகோணமலை மத்திய பஸ் நிலையத்தை சென்றடைந்தது.

இந்த விசேட நிகழ்வில் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், ரொசான் அக்மீமன உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் மாவட்ட இளைஞர் சம்மேளன பிரதிநிதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் பெருந்திரளாகப் பங்கேற்றிருந்தனர்.

ஊர்வலத்தின் நிறைவில், போதைப்பொருள் ஒழிப்பின் முக்கியத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புக்கூறல் தொடர்பான விழிப்புணர்வு கலந்தாலோசனைகளும் விசேட உரையாடல்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts