பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்பினால் கடுமையான நடவடிக்கை: பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிரடி உத்தரவு
பாறுக் ஷிஹான்-இலங்கையில் பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் (Kerosene) பயன்படுத்தப்படுவது தொடர்பாக தொடர்பாக பல்வேறு பகுதிகளில் இலங்கை பொலிஸ் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை அடுத்து நாடு தழுவிய அளவில் பொலிஸார் இவ் விசேட சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடவடிக்கையின் போது மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.










