admin

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி காணிகள் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும். ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன்–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு வாகரை வாழைச்சேனை, புனானை பகுதிகள் உட்பட பல பிரதேசங்களில் ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சட்டவிரோதமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி சொத்து குவித்துள்ளார் எனவே சூறையாடிய காணிகள் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார் நாடு பூராகவும் சுகாதார ஊழியர்கள் ஒரே

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா சூறையாடி காணிகள் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும். ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன்– Read More »

112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள்  வழங்கும் நிகழ்வு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும்நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து  ஏற்பாடு செய்திருந்த 15 மாவட்ட கடற்றொழில் அலுவலகங்களுக்கு புதிதாகஉள்வாங்கப்பட்டுள்ள கடற்றொழில்  உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) கொழும்பில்அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர்  கூடத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக நியமனம் பெற்ற 112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. கடற்றொழில் துறையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், மாவட்ட மட்டத்தில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் முன்னெடுக்கும் நோக்கில் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி. பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

112 கடற்றொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள்  வழங்கும் நிகழ்வு Read More »

கல்முனை பிரபல பாடசாலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் அங்கசேட்டை: பொதுச்சுகாதார பரிசோதகரைக் கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு!

பாறுக் ஷிஹான் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI) கைது செய்வதற்குப் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (18) மாணவர்களுக்கான வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள் இடம்பெற்றபோதே இத்தகாத சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுகாதாரப் பரிசோதனையின் போது குறித்த அதிகாரி தங்களுக்கு உடல ரீதியாகவும் மன ரீதியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட

கல்முனை பிரபல பாடசாலையில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் அங்கசேட்டை: பொதுச்சுகாதார பரிசோதகரைக் கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு! Read More »

எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமனத்தில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு கவலையளிக்கிறது எம்.ஏ.அப்துல் ஹாதி 

ஹஸ்பர் ஏ ஹலீம் – இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் வாழும் ஒரு ஜனநாயக நாட்டில், அரச நிறுவனங்களினதும் சுயாதீன ஆணைக்குழுக்களினதும் நியமனங்களில் அனைத்து சமூகங்களினதும் நியாயமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட வேண்டியது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் அடிப்படைப் பொறுப்பாகும். இருப்பினும், அண்மையில் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நியமிக்கப்படாமை மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிண்ணியா பிரதேச சபை

எல்லை நிர்ணய ஆணைக்குழு நியமனத்தில் சிறுபான்மையினர் புறக்கணிப்பு கவலையளிக்கிறது எம்.ஏ.அப்துல் ஹாதி  Read More »

தேசிய லொத்தர் சபையினால் மட்டக்களப்பு மாவட்ட விற்பனையாளர்களுக்கான காப்புறுதி திட்ட உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு.

தேசிய ரீதியில் அரசாங்கத்தினால் வீதி ஓரங்களில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் புதன்கிழமை(19.08.2026) மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்குர்பணம் செய்து வைக்கப்பட்டது. தேசிய லொத்தர் சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எஸ்.சிவகாந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியம் கலந்து கொண்டு மாவட்டத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப் பட்டவர்களுக்கான காப்புறுதி திட்டத்திற்கான உறுதி பத்திரங்களை விற்பனை யாளர்களுக்கு வழங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு காப்புறுதி

தேசிய லொத்தர் சபையினால் மட்டக்களப்பு மாவட்ட விற்பனையாளர்களுக்கான காப்புறுதி திட்ட உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு. Read More »

கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக் கோரி சபாநாயகரிடம் கையெழுத்துடனான கோரிக்கை கடிதம் சமர்ப்பிப்பு!

ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபினால் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட, கொவிட் காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தினால் பலவந்தமாக எரிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் பிரேரணையைப், பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயும்படி கோரி 20 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை கடிதம் இன்று (19.08.2026) சபாநாயகர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டது. ஐக்கிய

கொவிட் காலத்தில் எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பான பிரேரணையைப் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் உள்ளீர்த்து ஆராயக் கோரி சபாநாயகரிடம் கையெழுத்துடனான கோரிக்கை கடிதம் சமர்ப்பிப்பு! Read More »

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை

 (கனகராஜா சரவணன்) கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று புதன்கிழமை (19) பிற்பகல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதுடன் அதனை கண்டு அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய

கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை அதனை கண்ட இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்தனர்- மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 தற்கொலை Read More »

களுவாஞ்சிகுடி பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்த பலசரக்குக்கடைக்கு நீதிமன்ற உத்தரவின் பெயரில் பூட்டு.

களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன் மற்றும் மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினரால் செவ்வாய்கிழமை(18.08.2026)  பலசரக்குக் கடைகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்கள் என்பன திடீர் பரிசோதனைகளுக்குட்பட்டன. இதன்போது களுவாஞ்சிகுடியில் பல சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிவந்த பலசரக்குக் கடை ஒன்று இனம்காணப்பட்டு அக்கடை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சுகாதாரப் பரிசோதகர்களால் முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது. குறித்த பலசரக்குக் கடை மிகமோசமான நிலையில் சுகாதார சீர்கேடுகள் நிலவியிருந்த நிலையிலேயே சுகாதாரப்

களுவாஞ்சிகுடி பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்த பலசரக்குக்கடைக்கு நீதிமன்ற உத்தரவின் பெயரில் பூட்டு. Read More »

வீடொன்றின் மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த இலங்கை கஞ்சா தோட்டபயிர்ச்செய்கையை பொலிஸார்   புதன்கிழமை (19) அதிரடியாகக் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர். அம்பாறை மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களான ஜவாத் (71380), இஸ்மத் (88503) ஆகியோருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகவே இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கல்முனை தலைமையக பொலிஸ்

வீடொன்றின் மொட்டை மாடியில்  கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது Read More »

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறுதல் -சஜீத் பிரேமதாசவுடனான சந்திப்பு

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக கட்சிகளின் கருத்துக்களையும் விளக்கங்களையும் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்களை CaFFE அமைப்பு சந்திக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் நேற்றைய தினம்(18) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு  எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கலந்துரையாடலில் CaFFE அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கின்,

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறுதல் -சஜீத் பிரேமதாசவுடனான சந்திப்பு Read More »