“சஹ்ரானின் சட்டத்தரணிக்கு நீதி அமைச்சா?” – விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டால் அரசியலில் பெரும் பரபரப்பு!
இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான குற்றவாளியான சஹ்ரான் ஹாஷிமுக்காக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியே இன்றைய நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார் எனத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச பகிரங்கமாகச் சாடியுள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அன்று மட்டக்களப்பு நீதிமன்றத்திற்குச் சென்று சஹ்ரான் தரப்புக்காக வாதிட்டவர் என்பதைக் கோடிட்டுக் காட்டியதோடு, இவ்வாறான நியமனங்கள் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் […]










