admin

கல்முனை பொது சந்தை பகுதியில் பரிசோதனை

பாறுக் ஷிஹான் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே. எம். நிஜாமுதீன் தலைமையில்கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கல்முனை பொது சந்தை பகுதியில் உணவகங்கள் மற்றும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்கள் பொது சுகாதார பரிசோதகர்களினால் இன்று (08) பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.இதன்போது மனித நுகர்வுக்குப் […]

கல்முனை பொது சந்தை பகுதியில் பரிசோதனை Read More »

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது – துப்பாக்கி மீட்பு.

(கனகராசா சரவணன்)மங்களகம பிரதேசத்தில் எருமை மாடு ஒன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (8) கைது செய்ததுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் மீட்டுள்ளதாக மங்களகம பொலிசார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராமமான மங்களகம பொலிஸ் பிரிவில் உள்ள பக்கியல்ல சின்னவத்தையைச் சேர்ந்த செல்லத்துரை கிருஷ்ணன் என்பவரின் பெண் எருமை மாடு ஒன்றை, சம்பவ தினமான நேற்று அதிகாலையில் மங்களகம 25வது மைல்கல் பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக

மங்களகம பகுதியில் எருமை மாட்டை சுட்டுக் கொன்ற இரு இளைஞர்கள் கைது – துப்பாக்கி மீட்பு. Read More »

மருத்துவத் துறைக்குத் தெரிவான சர்ஜன் வைத்தியர் சிறிநாத் பாராளுமன்ற உறுப்பினர நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பின்னணியிலிருந்து சாதனை படைத்து, மருத்துவத் துறைக்குத் தெரிவாகியுள்ள மாணவன் பசிதரன் சர்ஜன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்தை மரியாதை நிமிர்த்தம் பாராளுமன்ற உறுப்பினரது மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள அலுவலகத்தில் வைத்து திங்கட்கிழமை(06.04.2026) சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். ஓந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த பசிதரன் சர்ஜன், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்

மருத்துவத் துறைக்குத் தெரிவான சர்ஜன் வைத்தியர் சிறிநாத் பாராளுமன்ற உறுப்பினர நேரில் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார். Read More »

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(photoes)

பாறுக் ஷிஹான் தனது வீட்டு முற்றத்தில் வைத்து யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் புதன்கிழமை (8) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் மதியம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை பகுதி மஜீத்புரம் மல்வத்தை-03 முகவரியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தயான 48 வயது

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு(photoes) Read More »

அவுஸ்ரேலியாவிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை. முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன. இதன் ஒரு கட்டமாக கிரிக்கெட் விளையாட்டு துறையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து புதிய வீரர்களை இனங்காண முகமாக மட்டக்களப்பு மாவட்ட கோட்டை முனை விளையாட்டு கிராம கிரிக்கெட் மைதானத்திற்கு சர்வதேச புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் ஒன்றை செவ்வாய்கிழமை(07.04.2026) மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய நாட்டில் 35 வருடங்களாக சர்வதேச கிரிக்கட் மைதானங்களை பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற

அவுஸ்ரேலியாவிலிருந்து மட்டக்களப்புக்கு வந்த புற்தரை ஆடுகளத்திற்கான நிபுணர் பிரட் வப்டிஸ் Read More »

அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம் – பிரபு எம்.பி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்றுதன் பின்னர் அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம். வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், போன்ற பல பிரதேசங்களிலும் இராணுவத்திடம் இருந்த காணிகள் அதேபோன்று மட்டக்களப்பிலும், அம்பாறையில், இருக்கின்ற காணிகளையும் தொடர்ச்சியாக நாம் விடுவித்து வருகின்றோம். என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்

அனுரகுமார திசாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் வடக்கு கிழக்கிலே கூடுதலான காணிகளை நாங்கள் விடுவித்து இருக்கின்றோம் – பிரபு எம்.பி Read More »

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாக செல்வதை தவிர்த்து முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் விவசாய நடவடிக்கைகளின்போது பயன் தரும் மா, மற்றும் தென்னை, வெற்றிலை, செய்கை இலைக்கறி, வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கு வேண்டிய புற்றரைகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு. Read More »

டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை.

பாறுக் ஷிஹான் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி டீசல் எரிபொருட்கள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வீடொன்றுடன் இணைந்த களஞ்சியசாலையில் டீசல் எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக இன்று மாலை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வழிகாட்டலில் அப்பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர்களான கே.எல்.எம் முஸ்தபா அனுர குமார

டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை. Read More »

சாதனை படைத்த செங்கலடி மத்திய கல்லூரி: பல்கலைக்கழகம் தெரிவான 45 மாணவர்களுக்கு வரவேற்பு!

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 45 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வு இன்று காலை மிக விமரிசையாக நடைபெற்றது.இன்று காலை செங்கலடி சந்தி பிரதான வீதியில் ஆரம்பமான இந்த வரவேற்பு ஊர்வலம், அப்பகுதியையே விழாக்கோலம் பூணச் செய்தது. பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய 45 மாணவர்களுக்கும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர். அதனைத்

சாதனை படைத்த செங்கலடி மத்திய கல்லூரி: பல்கலைக்கழகம் தெரிவான 45 மாணவர்களுக்கு வரவேற்பு! Read More »

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள்.

இயேசுபிரானின் தவக்காலத்தின் இறுதி விசேட தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை(05.04.2026) காலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றது. மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கடந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் இதன் போது பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் விசேட நினைவஞ்சலி ஆராதனைகள் இடம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு வழிபாடு ஆராதனைகள். Read More »