• Home
  • ›
  • ஆன்மிகம்
  • ›
  • தீபாவளித் திருநாளை முன்னிட்டு திருகோணமலை, திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாட்டு நிகழ்வு

தீபாவளித் திருநாளை முன்னிட்டு திருகோணமலை, திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் விசேட வழிபாட்டு நிகழ்வு

A.H.HASFAR HASFAR

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர்  கமகெதர திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ய. அநிருத்தனன் அவர்களின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்ட செயலக இந்து சமய கலாசார உத்தியோகத்தர் திருமதி இலக்குமிதேவி ஸ்ரீதரன் அவர்களின் ஒருங்கிணைப்பில், திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இன்று (08) விசேட வழிபாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.குகதாசன் அவர்கள் இவ்விசேட வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டார்.

இதன்போது, கோணேசர் பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பக்தர்களின் நலன், நாட்டின் அமைதி, சுபீட்சம் மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றை வேண்டி விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இந்து மக்களின் முக்கியமான சமய மற்றும் கலாசார விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது, இலங்கையில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கிடையே சமய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

Share the Post: