• Home
  • உள்ளூர் செய்திகள்
  • புனித வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள்.

புனித வெள்ளியை முன்னிட்டு மட்டக்களப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடுகள்.

whatsapp image 2026 04 03 at 21.32.22

உலக வாழ் கிறிஸ்தவர்களின் புனித வழிபாடுகளில் ஒன்றான இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(03.04.2026) மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றனஇதேவேளை மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்திலும் பேராலய பங்குத்தந்தை எஸ்.ஜெயகாந்தன் தலைமையில் இந்த புனித வெள்ளி சிலுவைப்பாதை பாடுகளின் நினைவு நிகழ்வுகள் இன்று காலை இடம் பெற்றது.புனித வெள்ளி தினத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரானின் உருவச்சிலை வாகன பேரணியாக இன்று காலை ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த சிலுவைப்பாதை ஊர்வலம் ஆனது நகரின் பிரதான வீதிகளுடாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்ததுஇதன்போது தவக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் இயேசு ஆண்டவரின் நினைவில் இருந்து வாழ்க்கையில் கைப்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் புனித வெள்ளி ஜெப வழிபாடுகளும் பக்திபூர்வமாக இடம்பெற்றன.

Share the Post: