இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிய கப்பலொன்று இன்று (02) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டுத்தாபனத்தின் மேலாண்மை பணிப்பாளர் மயூத நெத்திகுமாரகே, இந்த எரிபொருள் தொகையில் 32,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 8,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருள் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Post Views: 26




