மட்டக்களப்பு சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களைக் கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு 04.04.2026 கல்லடி உப்போடையில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
அவ்வமைப்பின் தலைவர் உ. உதயகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய சேவையாற்றிய ஆளுமைகளின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து, நினைவுச்சின்னம், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, வைத்தியர் இ.சிறிநாத், ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைத் தவிசாளர் மே.வினோராஜ், பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன், மதகுருமார்கள், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.




