• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா இன்று காலை இளவாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா இன்று காலை இளவாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்

பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறு ஒன்றின் போது, பெண் ஒருவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 26) குறித்த பகுதியில் காணி துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட தர்க்கத்தில், அவர் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் காட்சிகள் வெளியாகியிருந்தன.

கைது செய்யப்பட்டுள்ள அவர், மேலதிக விசாரணைக்காக இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளில் இவர் பலமுறை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: