• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வவுணதீவில் மனித நேய சமுதாயக் கல்லூரி பயிலுனர்களுக்கான இறுதி மதிப்பீட்டுப் பரீட்சை மற்றும் செயன்முறை அமர்வு!

வவுணதீவில் மனித நேய சமுதாயக் கல்லூரி பயிலுனர்களுக்கான இறுதி மதிப்பீட்டுப் பரீட்சை மற்றும் செயன்முறை அமர்வு!

மனித நேய நம்பிக்கை நிதியத்தின் (Humanitarian Trust) நிதி அனுசரணையில், மட்டக்களப்பு மாவட்டம் – மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கறடியனாறு பிரதேசத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மனித நேய சமுதாயக் கல்லூரியின் (MNCC) ‘CarreerFIT & IT’ பயிற்சிநெறி பயிலுனர்களுக்கான இறுதி மதிப்பீட்டுப் பரீட்சை அண்மையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.

இவ் இறுதி மதிப்பீட்டுப் பரீட்சையானது மட்டக்களப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் (VTC) விரிவுரையாளர்களினால் தொழில்முறை ரீதியாகக் கண்காணிக்கப்பட்டு நடாத்தப்பட்டது.

இதன்போது, பயிலுனர்களுக்கு மைக்ரோசொப்ட் ஆபீஸ் (Microsoft Office Package) பாடத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும் Word, Excel மற்றும் PowerPoint ஆகிய மென்பொருட்கள் அடிப்படையில் எழுத்துமூலம் மற்றும் செயன்முறை ரீதியான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், இப்பயிற்சிநெறியின் ஊடாகத் தாம் கற்றுக்கொண்ட தொழில்நுட்ப விடயங்களை உள்ளடக்கி, பயிலுனர்களினால் தயாரிக்கப்பட்ட விசேட கணினித் திரைக்காட்சி விளக்கக்காட்சிகளும் (Presentations) இதன்போது நடுவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share the Post:

Related Posts