பனாமாவில் 7.7 மெக்னிடியூட் பலத்த நிலநடுக்கம்
பனாமாவின் மத்திய பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.7 மெக்னிடியூட்டாகப் பதிவான இந்த நிலஅதிர்வினால் கட்டிடங்கள், வீதிகள் பெரும் சேதமடைந்துள்ளன. சுமார் 13 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பனாமா நகரம் முழுவதும் மிகக் கடுமையாக உணரப்பட்டதுடன், பக்கத்து நாடான கொலம்பியா வரையிலும் உணரப்பட்டுள்ளது. உயர்கோபுரக் கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் அதிர்வுகள் (Aftershocks) பதிவாகியுள்ளன.
பனாமாவில் 7.7 மெக்னிடியூட் பலத்த நிலநடுக்கம் Read More »






