August 2, 2026

புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் (31) இரவு இடம்பெற்றுள்ளது. புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத பாதையின் 290 ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் காங்கேசன்துறையில் இருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார். புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். Read More »

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு விசேட சிரமதானம்

பாறுக் ஷிஹான் தேசிய ரீதியிலான டெங்கு ஒழிப்பு வார வேலைத்திட்டத்திற்கு அமைவாக, சம்மாந்துறை முகைதீன் மாவத்தை வீதியின் இருமருங்கிலும் காணப்பட்ட கழிவுகள் மற்றும் பற்றைக்காடுகளை அகற்றிச் சுத்தம் செய்யும் விசேட சிரமதான நடவடிக்கை (01)   முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபை, பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியன இணைந்து இந்நடவடிக்கையை ஒருங்கிணைப்பு செய்திருந்தன. இதன்போது, சம்மாந்துறை பிரதேச சபையின் கனரக வாகனங்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு,

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு விசேட சிரமதானம் Read More »

வீட்டு நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்

சாய்ந்தமருதில் பிரஜாசக்தி திட்டம்; 17 பயனாளிகளின் வீட்டு நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் களஆய்வு!170 இலட்சம் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் திட்டம்; பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல் பாறுக் ஷிஹான் பிரஜாசக்தி நிகழ்ச்சித் திட்டம் – 2026 இன் கீழ் “தனக்கான ஓர் இடம்; அழகான வாழ்க்கை” எனும் கருப்பொருளில், சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 17 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 17 பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணிகள்

வீட்டு நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல் Read More »

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அதிரடிப் போக்குவரத்துச் சோதனை- 187 வழக்குகள் பதிவு, 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பாறுக் ஷிஹான் அக்கரைப்பற்று பொலிஸ் நிர்வாகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் (31) வெள்ளிக்கிழமை மாலை விசேட போக்குவரத்துச் சட்ட அமுலாக்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இச்சோதனை நடவடிக்கையின் போது 187 போக்குவரத்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதுடன், 23 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல அவர்களின் வழிகாட்டலில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்   நுவான் தந்தநாராயண அவர்களின் நெறிப்படுத்தலிலும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  சுனில் திசாநாயக்க   ஒத்துழைப்பிலும்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் அதிரடிப் போக்குவரத்துச் சோதனை- 187 வழக்குகள் பதிவு, 23 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் Read More »

நிந்தவூரில் வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டோருக்கு பொலிஸார் ஆப்பு- 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (31) இரவு வீதிகளில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபட்ட இளைஞர்களை இலக்கு வைத்து நிந்தவூர் பொலிஸார் அதிரடிச் சோதன நடவடிக்கையொன்றை முன்னெடுத்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் மற்றும் சட்டவிரோதமாக உருமாற்றம் (Modify) செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகப் பயணித்த இளைஞர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்ததுடன், இதுவரை 5 மோட்டார் சைக்கிள்களைத் தம்வசம் பறிமுதல் செய்துள்ளனர். இச்சோதனை நடவடிக்கையின் போது ஒரே மோட்டார் சைக்கிளில்

நிந்தவூரில் வீதிப் பந்தயத்தில் ஈடுபட்டோருக்கு பொலிஸார் ஆப்பு- 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் Read More »

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம்

பாறுக் ஷிஹான் மாநகரசபை தீயணைப்புப் பிரிவின் மந்தநிலைக்கு வர்த்தகர்கள், பொதுமக்கள் கடும் அதிருப்தி சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள பிரபல ‘பில் பில்’ (Fil Fil) உணவகத்தில் (01) திடீரெனப் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொதுமக்கள், சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் களப் பணியாளர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இத்தீ விபத்துக்கான பின்னணி மற்றும் ஏற்பட்ட சேத

சாய்ந்தமருது உணவகத்தில் தீ விபத்து- கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மக்கள் தீவிரம் Read More »

தீகவாபியில் பயிர்ச்செய்கைகள் நாசம்- அறுவடைக்குத் தயாராகவிருந்த நெல் வயல்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி பிரதேசத்தில் அறுவடைக்குத் தயாரான நிலையில் காணப்பட்ட பல ஏக்கர் நெல் வயல்கள் காட்டு யானைகளின் தாக்குதலினால் முற்றாகச் சேதமடைந்துள்ளன. இரவு வேளையில் காட்டுப்பகுதியிலிருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைக் கூட்டங்கள், அறுவடைக்குத் தயாராகவுள்ள பயிர்ச் செய்கைகளுக்குள் புகுந்து நெற்பயிர்களை உட்கொண்டதுடன், அவற்றை மிதித்து நாசப்படுத்தியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வங்கிக் கடன்களைப் பெற்றுப் பெரும் சிரமத்திற்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச்செய்கைகள், அறுவடைக்குச் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறு

தீகவாபியில் பயிர்ச்செய்கைகள் நாசம்- அறுவடைக்குத் தயாராகவிருந்த நெல் வயல்களை துவம்சம் செய்த காட்டு யானைகள் Read More »