August 1, 2026

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர்   கைது

  பாறுக் ஷிஹான்இலங்கைக்கு வருகை தந்த மூன்று ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வெளிநாட்டுப் பணப்பையைத் திருடிய நபரை  அறுகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை  (31) ரஷ்யாவிலிருந்து வருகை தந்த தந்தை மற்றும் அவரது இரு மகள்கள் அருகம்பே, குடகல்ல கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர். அவர்கள் தம்முடைய பயணப்பைகளை அறையில் வைத்துவிட்டு கடலில் குளிக்கச் சென்ற வேளையில், அங்கிருந்த நபர் ஒருவர் 3,200 அமெரிக்க டொலர்கள் மற்றும் 1,620

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் பணத்தைத் திருடிய நபர்   கைது Read More »

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழு தெரிவு

பாறுக் ஷிஹான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான புதிய மத்திய குழுவைத் தெரிவு செய்யும் விசேட நிகழ்வு நேற்று (31) நாவிதன்வெளியில் இடம்பெற்றது. நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் லதீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கட்சியின் மாவட்ட செயற்குழு தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் உப தலைவரும் அக்கறைப்பற்று மாநகர சபை உறுப்பினருமான

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி மத்திய குழு தெரிவு Read More »

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம்

பாறுக் ஷிஹான் அம்பாறை  இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை (31)  மாலை பெய்த கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து முற்றாகச் சேதமடைந்துள்ளது. குடும்பத்தின் தந்தை கொழும்புக்குச் சென்றுள்ள நிலையில், தாய் அருகிலுள்ள தையல் நிலையமொன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.சம்பவத்தின் போது வீட்டில் எவரும் இருக்கவில்லை எனப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். மழை பெய்யத் தொடங்கிய வேளையில்இ வீட்டிலிருந்த இரண்டு பிள்ளைகளும் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கத்தால்

மின்னல் தாக்கி வீடு தீப்பிடித்து எரிந்தது; உபகரணங்கள் நாசம் Read More »

பல்கலைக்கழக அனுமதிக்கான Z – Score வெட்டுப்புள்ளிகள் வெளியீடு 2025/2026 கல்வியாண்டு!

கடந்த 2025ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான அரசு பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச இசட்-புள்ளி (Z-Score Cut-off Marks) வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கான பல்கலைக்கழகம் மற்றும் பாடநெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ugc.ac.lk வாயிலாக பார்வையிட முடியும்.

பல்கலைக்கழக அனுமதிக்கான Z – Score வெட்டுப்புள்ளிகள் வெளியீடு 2025/2026 கல்வியாண்டு! Read More »

தென்மேல் பருவமழை தீவிரம்: 7 மாவட்டங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாட்டில் தென்மேல் பருவமழை மேலும் தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் 7 மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (01) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென்மேல் பருவமழை தீவிரம்: 7 மாவட்டங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்பு! Read More »

பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்பினால் கடுமையான நடவடிக்கை: பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிரடி உத்தரவு

பாறுக் ஷிஹான்-இலங்கையில் பயணிகள் பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் (Kerosene) பயன்படுத்தப்படுவது தொடர்பாக  தொடர்பாக  பல்வேறு பகுதிகளில் இலங்கை பொலிஸ் திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி இயக்கப்படும் பேருந்துகள் குறித்து பொதுமக்கள் அளித்த முறைப்பாடுகளை  அடுத்து  நாடு தழுவிய அளவில் பொலிஸார் இவ் விசேட சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடவடிக்கையின் போது  மண்ணெண்ணெயில் இயக்கப்பட்ட சுமார் 100 பயணிகள் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு  சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் நிரப்பினால் கடுமையான நடவடிக்கை: பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிரடி உத்தரவு Read More »

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்- அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி–

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் 9,400 மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள். அம்மை அப்பன் மாற்றுத்திறனாளிகள் இல்லம் எமது மாற்றுத்திறனாளிகளுக்காக எமது மக்களால் கட்டப்படுகிறது. இந்த இல்லத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன என தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி தெரிவித்தார். மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுவரும் அம்மை அப்பன் இல்லம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (31) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கு அம்மை அப்பன் இல்லம் கட்டு மானப்பணி ஆரம்பம்- அமைப்பின் பணிப்பாளர் சாரங்கபாணி அருள்மொழி– Read More »

30 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் அற்புதக் கனி: இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மக்களுக்குப் பகிர்ந்தளிப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் ஒலுவில் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் வளாகத்தில் நடப்பட்டிருந்த பேரீச்ச மரத்திலிருந்து முதன்முறையாகப் பேரிச்சம் பழங்கள் அறுவடை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று (31) சிறப்பாக நடைபெற்றது. சுமார் மூன்று தசாப்த கால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பள்ளிவாயல் வளாகத்தில் காய்த்துப் பழுத்துள்ள இந்த அருள் நிறைந்த பேரீச்சம்பழங்கள் ஊர் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019.02.04 ஆம் திகதி, நாட்டின்

30 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் அற்புதக் கனி: இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து மக்களுக்குப் பகிர்ந்தளிப்பு Read More »