July 27, 2026

தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவிகள் வரலாற்றுச் சாதனை!

ஹஸ்பர் ஏ.எச்- கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தைக் கைப்பற்றியுள்ள தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவிகளுக்கு Jeyakumaran’s Global Foundation அமைப்பின் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான குமார் ஜெயக்குமரன் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (26) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண வலைப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பிடித்து

தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவிகள் வரலாற்றுச் சாதனை! Read More »

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

(க.சரவணன்) 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை (23)  லண்டனில் நடைபெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம்  (TEPAIJ)     மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிக ரகத்திற்கு முன்பாக  (13 Hyde Park

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம். Read More »

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா

மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டும், சிலோன் மீடியா போரத்தின் (Ceylon Media Forum) 7ஆம் ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் முகமாகவும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான விசேட இரு நாள் ஊடகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய இந்தச் சுற்றுலா எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடும்,

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் 2ஆவது நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை (26) ஒலுவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஜூலை 25) ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் இப்பட்டமளிப்பு விழா நாளை திங்கட்கிழமை (27) நிறைவடையும். 3,398 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு Read More »

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் நாங்கள் சேவை செய்கிறோம் எனும் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய வவுணதீவு பன்சேனை கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று சனிக்கிழமை (25) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஞா. நவீகரன்  PMJF. PMAF தலைமையில் பன்சேனை ஆரம்ப மருத்துவ  சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது இதில் அதிதிகளாக லயன்ஸ் கழகத்தின்  மாவட்ட ஆளுநர் லயன் யி.ஷாஹிர்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம் Read More »