நூலகப்பராமரிப்பு தொடர்பாடல் பயிற்சி நெறி.!

(ஹஸ்பர் ஏ.எச்) கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப்பிரிவின் மாகாணப் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் திருகோணமலை மாவட்ட பொது நூலகங்களில் கடமையாற்றும் நூலக உதவியாளர்களிற்கான நூலகப் பராமரிப்பு மற்றும் தொடர்பாடல் சம்பந்தமான பயிற்சி நெறி புதன்கிழமை (15) திருகோணமலையில் உள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு மண்டபத்தில் இடம் பெற்றது. இப் பயிற்சிக்கு வளவாளராக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் சிரோஷ்ட உதவி நூலகர் M. N . ரவிக்குமார் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

நூலகப்பராமரிப்பு தொடர்பாடல் பயிற்சி நெறி.! Read More »