June 28, 2026

நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபர் கைது

பாறுக் ஷிஹான் கதிர்காம பாத யாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று(27) மாலை இடம்பெற்றுள்ளதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரதம பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 21 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நாய் யாழில் இருந்து கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டு வரும் குழுவினரோடு பயணித்து வரும் சுப்பிரமணியன் எனும் […]

நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபர் கைது Read More »

மட்டக்களப்பில் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்.

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் இன்று (27) பாடசாலையின் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட உள்ளக அரங்கில் கோலாகலமாக இடம் பெற்றது. புனித மிக்கேல் கல்லூரியின் கொழும்பு கிளை பழைய மாணவர் சங்க தலைவர் எஸ். சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி மற்றும் கூடைப்பந்தாட்ட வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய யேசுசபை

மட்டக்களப்பில் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் ஆரம்பம். Read More »

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

( பாறுக் ஷிஹான்) மீன் களஞ்சிய வாடியில் உள்ள  வாயு மீள் நிரப்பும்   பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பள்ளிவாசல் அருகில் கடலோரம் அமைந்துள்ள மீன் களஞ்சிய வாடியில்  வெள்ளிக்கிழமை(26) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பழுதடைந்திருந்த எரிவாயு நிரப்பு நிலையத்தில் பழுதுபார்ப்பதற்காக வருகை தந்தவர்களே இவ்வனர்த்தத்தில் சிக்கி கொண்டதுடன் சிறு வெடிப்பு காரணமாக அவ்விடத்தில்

கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம் Read More »