போதைப்பொருட்களுடன் பிடிபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவனின் தகுதி ரத்து: துணைவேந்தர் அதிரடி நடவடிக்கை!
பேராதனைப் பல்கலைக்கழக விடுதி ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருட்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவரின், மாணவர் தகுதியை (Student Status) ரத்து செய்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவன், பல்கலைக்கழக வளாகத்திற்குள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்திருந்தன. இதன் அடிப்படையில், அவர் தங்கியிருந்த விடுதி அறையை பல்கலைக்கழகத்தின்



