June 1, 2026

சென்னை கோயம்பேட்டில் பரபரப்பு: இலங்கைத் தமிழ் யுவதி கார் ஏற்றிப் படுகொலை; 6 பேர் கைது!

இந்தியாவின் சென்னை – கோயம்பேடு பகுதியில், இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறின் பின்னணியில் 18 வயதுடைய இலங்கைத் தமிழ் யுவதி ஒருவர் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த 18 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி தனது நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு அவர் தனது

சென்னை கோயம்பேட்டில் பரபரப்பு: இலங்கைத் தமிழ் யுவதி கார் ஏற்றிப் படுகொலை; 6 பேர் கைது! Read More »

போதைப்பொருள் ஒழிப்பு, சுயதொழில் வழிகாட்டல் மையமாக மாறவுள்ள EFO இன் புதிய கட்டடம்; அடிக்கல் நடும் விழா நஸீர் தலைமையில் நேற்று சிறப்பாய் இடம்பெற்றது!

கிழக்கு மாகாணத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் சமூக சேவையாற்றி வரும் ‘கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின்’ (Eastern Friendship Organization – EFO) புதிய செயலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் விழா நேற்று (31) ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஒன்றியத்தின் தவிசாளரும் பிரபல பொறியியலாளருமான எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இப்பிராந்தியத்தின் முன்னணி கல்விமான்கள், திணைக்களத் தலைவர்கள், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பல முக்கிய ஆளுமைகள்

போதைப்பொருள் ஒழிப்பு, சுயதொழில் வழிகாட்டல் மையமாக மாறவுள்ள EFO இன் புதிய கட்டடம்; அடிக்கல் நடும் விழா நஸீர் தலைமையில் நேற்று சிறப்பாய் இடம்பெற்றது! Read More »

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை Royal Challengers Bangalore (RCB) அணி மீண்டும் தன்வசப்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

“ஈ சாலா கப் நம்தே” (Ee Sala Cup Namde) என்ற ஒற்றை முழக்கத்துடன் பல வருடங்களாகக் காத்திருந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவை நனவாக்கி, ஆர்.சி.பி அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் மகுடத்தைச் சூடியுள்ளது. நடப்பு சாம்பியனாக இத்தொடரில் களமிறங்கிய பெங்களூரு அணி, ஆரம்பப் போட்டிகள் முதல் இறுதிப்போட்டி வரை தங்களின் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இம்முறை அணியின் கேப்டன் ரஜத் படிதார் (Rajat Patidar) ஆளுமைமிக்க தலைமைத்துவத்துடன் அணியை வழிநடத்தியிருந்ததோடு,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2026ஆம் ஆண்டுக்கான சாம்பியன் பட்டத்தை Royal Challengers Bangalore (RCB) அணி மீண்டும் தன்வசப்படுத்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது. Read More »

மட்டு திராய்மடுவில் வீடு ஒன்றில் எரிவாயு தீப்பற்றல்

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் வீ ஒன்றில் எரிவாயு சிலிண்டர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 10.00 மணிக்கு தீப்பற்றியதையடுத்து வீட்டின் உரிமையாளர் புத்திசாரியமாக ஈரமான சாக்கு போட்டு தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் மட்டு மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் சில நிமிடங்களில் சென்றதையடுத்து மக்கள் பாராட்டு தெரிவித்தனர். குறித்த வீட்டில் சம்பவ தினமான நேற்று இரவு வீட்டின் உரிமையாளர் எரிவாயுவை பயன்படுத்தி உணவு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்

மட்டு திராய்மடுவில் வீடு ஒன்றில் எரிவாயு தீப்பற்றல் Read More »

மட்டு கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டு  தயாரிப்பான ஷாட்கன் துப்பாக்கியுடன் 26 வயதுடைய விவசாயி ஒருவர் கைது—

(கனகராஜா சரவணன்) கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு தயாரிப்பான  ஷாட்கன் ரக துப்பாக்கி ஒன்றுடன்  பங்குடாவெளியைச் சேர்ந்த விவசாயி ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலையில் கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.பி.பத்தும் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் வேப்பவெட்டுவான் வயல் பகுதியில் நிலக்கடலை பயிர் செய்கையில் ஈடுபட்டுவரும் பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி

மட்டு கரடியனாறு பிரதேசத்தில் உள்நாட்டு  தயாரிப்பான ஷாட்கன் துப்பாக்கியுடன் 26 வயதுடைய விவசாயி ஒருவர் கைது— Read More »

வெசாக் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் தன்சல் நிகழ்வு,

வெசாக் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் தன்சல் நிகழ்வு,  மாநகர சபை வளாகத்தின் முன்பாக மாநகர சபையின்  முதல்வர் க.செல்வராசா (சுப்ரா)அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் ,உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.  வெசாக் பண்டிகை எடுத்துரைக்கும் கருணை, அன்பு, தியாகம் மற்றும் மனிதநேயப் பண்புகளைப் போற்றும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தன்சல் நிகழ்வின் மூலம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் தன்சல் நிகழ்வு, Read More »