திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் தொடர்பான கூட்டம் நேற்று (25) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் மற்றும் இன்னும் அகற்றப்படாமல் காணப்படும் வெடிபொருள் மாசுபாடு தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தி, நடவடிக்கைகள் முறையாக ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி


